முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

டிசம்பர், 2005 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஆதவனின் காகித மலர்களில் இருந்து...

அன்புடையீர், வருடப் பிறப்புக்கு முந்தின இரவு கனாட் பிளேஸில் நடந்த நிகழ்ச்சிகளைப் பற்றி திரு.அவினாஷ் மாதுர் உங்கள் பத்திரிகையில் எழுதியிருந்த கடிதத்தைப் படித்தேன். பெண்கள் இதுபோல ப்லாத்காரத்துக்கு உள்ளாவதற்கு பெண்களேதான் ஒரு விதத்தில் பொறுப்பாளியென்றும், இன்றைய நவநாகரீகப் பெண்களின் நடையுடை பாவனைகள் பரம யோகிகளைக்கூட நடத்தை தவறத் தூண்டுவனவாக உள்ளனவென்றும் அவர் எழுதியிருந்தார். இது மட்டுமா? பல பெண்கள் இத்தகைய நிகழ்ச்சிகள் மூலம் ஒரு ரகசியமான இன்பம் பெறுகிறார்களென்பதும், அவர்கள கூச்சல் போடுவதெல்லாம் வெறும் வெளிவேஷந்தான் என்பதும், ஒரு சில சாராரிடையே பலாத்காரமே செய்யப்படாத பெண்களைப் பலாத்காரம் செய்யப்பட்ட பெண்கள் இகழ்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியுள்ளனர் என்பதும், துர். மாதுரின் வேறு சில துணிவுகள். அடேயப்பா! துர்.மாதுரின் கரங்களில் நேரடியான பங்கும் அனுபவமும் இருந்திருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றன. அல்லது ஒரு வேளை, போன ஜன்மத்தில் அவர் ஒரு பெண்ணாக இருந்திருப்பாரோ என்னவோ? ஆம். அதுவும் சாத்தியம் தான். ஏனென்றால் அவருடைய சில அபிப்பிராயங்கள் ஏறாத்தாழ ஒரு நூற்றாண்டு பின் தங்கியவையாகத் தொனிக்கின

மா ரமணன், உமா ரமணன்!

இரண்டு உன்னதமான கலைஞர்களை எப்படியோ ஒரே சமயத்தில் பெற்றிருப்பது உலகக் கிரிக்கெட்டிற்குக் கிடைத்த பேறு. இருவரும் சமீபத்தில் அவர்களின் துறைகளில் சாதனை படைத்திருக்கிறார்கள். அணுமுறையாலும், ஆடுவதின் இயல்பாலும், குணாதிசயங்களாலும் வேறுபட்ட இரண்டு தனித்துவமான ஆளுமைகளை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்கிறது மனது. லாராவின் irregularity யாராலும் புரிந்துகொள்ள முடியாததாக இருந்திருக்கிறது. வீழ்ச்சியடைந்ததாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கும் போது அற்புதமான ஒரு ஆட்டத்தில் மீண்டு வருவதை ஒரு வழக்கமாகவே கொண்டிருக்கிறார். சிறப்பாய் ஆடிய அநேக ஆட்டங்கள் இவர் அணியை வெற்றி பெற வைத்ததில்லை. இவர் ஆடிய 121 டெஸ்ட்களில் இவர் அணி 56 முறை தோற்றிருக்கிறது. டெண்டுல்கர் ஒரு காலத்தில் குருவி தலையில் பனங்காய் போல இந்தியாவின் மொத்தச் சுமையையும் பலரின் எதிர்பார்புகளையும் தாங்கி இருந்ததில் அவர் ஆட்டம் பாதித்தது. சமீபத்திய உடலுபாதைகளால் அதிக ஓய்வு எடுக்கும்படி வந்ததும், மீண்டு வரும் முதல் ஆட்டத்திலேயே அவர் நன்றாக ஆடவேண்டும் என்கிற எதிர்பார்ப்பும் அவர் மனதில் இன்னும் கிலேசத்தை உண்டு செய்திருக்கும். "மார ஜனகன், குமார ஜனகன்..

பி(ப)டித்த வலைப்பதிவுகள்

ஆரம்பம் இங்கே ஃபீலியஸ் ஃபாக் மாதிரி நான் உலகம் (தமிழ்மணம் :D) சுற்றி வந்து பி(ப)டித்த வலைப்பதிவுகள் பற்றி எழுதும் போது புதன்கிழமை ஆகியிருக்கிறது - எப்படியேனும் ஏதோ ஒரு ஊரில் இது இன்னும் செவ்வாயாக இருக்காதா என்கிற நப்பாசையில்... கடந்த வாரத்தில் நான் படித்த (மிகச் சொற்பமான) பதிவுகளில் இவை பிடித்திருந்தன: நல்லவர்களும் கெட்டவர்களும் பிறரும் இயல்பாய்க்கொஞ்சம் தண்ணீர் கம்போடியா - மண்டை ஓடுகளின் நடுவில் பொன்னான காற்று தாராப்பூர் பன்னிரண்டு இந்தப் பதிவுகளைக் குறித்து இன்னும் எழுத ஆசையிருந்தாலும், நேரமின்மையால் தற்போது முடியவில்லை. *** இந்த நண்பர்களைத் தமிழ் வலைப்பதிவர்கள் சார்பில் வரவேற்கிறேன்: 1. வித்யா சுரேஷ் (இப்போது ஆளைக் கொஞ்சம் நாளாய்க் காணவில்லை) கவிதைக்கெனவே பதிவு் துவங்கியிருக்கும் இவரை நகுலனின் இந்த வரிகளை மனதிற் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். "கவிதைதான் இலக்கியத்தின் சிறந்த பகுதியாகக் கருதப்படுகிறது. இப்பொழுது கவிதையில் படிமத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிப் பறைசாற்றுகிறார்கள். ஆனால், படிமம் கூட மனநிலையின் சூக்கும உருவாக, சிந்தாகதியின் பிரதிரூப பிம்பமாகச் செயல்படுவதில்தான் சிற