இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள். “அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி, இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்? உன் துயர் தீர வழியென்ன? காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு? கருணை படைத்தவளே! மற பெண்ணே, விடு கண்ணே உன்னுயிர்த் தலைவன் சடுதியில் வருவானோ, வாரானோ! இன்னும் காத்திராதேயம்மா நாகக்குழலி (நாகவேணீ)!” இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா? இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும் எந்த உபசார வார்த்தைகளும் இ...
கண்ணன் தட்டினது!