Skip to main content

சாருமதி, அழகிய உள்ளம் படைத்தவளே...

இவள் காதலுற்றிருக்கிறாள். ஆபரணங்கள் அணிந்தொருங்கித் தன் காதல் நாயகன் வரவுக்காக ஏங்கிக் காத்திருக்கிறாள். அவன் இவளைப் பிரிந்து சென்றிருக்கிறான். அந்த வலி தாளாமல் ஆறுதலுக்காகத் தன் ஆருயிர்த்தோழியை நாடுகிறாள். வெறும் வார்த்தைகள் ஆறுதல் தருமோ? இவள் துயர் காணப் பொறுக்காமல், தேற்றும் நோக்கில் தோழி ஒரு ஆற்றாமைப் பாடலைப் பாடுகிறாள்.

“அழகிய உள்ளம் படைத்தவளே, சாருமதி,
இன்னும் ஏனிந்த அலங்கார உபசாரங்கள்?
உன் துயர் தீர வழியென்ன?

காதலன் பார்க்காத இந்த ஆபரணங்கள் உனக்கு எதற்கு?
கருணை படைத்தவளே!
மற பெண்ணே, 
விடு கண்ணே

உன்னுயிர்த் தலைவன்
சடுதியில் வருவானோ, வாரானோ!
இன்னும் காத்திராதேயம்மா
நாகக்குழலி (நாகவேணீ)!”

இது பிரிவாற்றாமையைச் சொல்லும் ஒரு குறுந்தொகைப் பாடலை நினைவுபடுத்துகிறதா? 

இந்த ஜாவளியை (நேரடிப் பேச்சு வழக்கில் புனையப்பட்ட பாடல்) தெலுங்கில் இயற்றியவர் பட்டாபிராமையா. தமிழ் மொழியாக்கம் எனது கைவேலை - உத்தேசமாகச் சரியாய் இருக்க வாய்ப்புள்ளது. தேவையற்ற மேல்ப்பூச்சைக் களையச்சொல்லும் பாடலின் பொருள் போலவே அதன் வரிகளும்  எந்த உபசார வார்த்தைகளும் இல்லாமல் எளிய, நேரடியான  மொழியில் அமைந்துள்ள இப்பாடல்  நம்மை ஆட்கொள்கிறது.  பரிவுடனே தோழி இவளைக் கடிந்து கொள்வதை இசைப்பதில் கானடா இராகம் சரியான தேர்வாய்த்தோன்றுகிறது.

இப்பாடலை ஐதராபாத் சகோதரர்கள் பாடிய  ஒலிப்பதிவு கீழே. வேறு சில பாடகர்கள் இதைப்பாடியிருந்தாலும் இந்த இரட்டையர் பாட்டே எனக்குப்பிடித்தமானது. பெங்களூர் கச்சேரியொன்றில் இதை இவர்கள் பாடி நேரடியாகவே கேட்டிருக்கிறேன் (அன்று மிக அற்புதமாகப் பாடினர்).   பாடலாசிரியர் பற்றிய குறிப்புகள் இணையத்தில் நான் தேடியவரை குறைவாகவே காணப்படுகின்றன. 
பாடல் வரிகளைத் தமிழ்ப்’படுத்தாமல்’ ஆங்கிலத்திலேயே தருகிறேன்:

cArumatI upacAramu lETikE
mIrina shOkamulE rIti dhIru


sarasuDu jUDani AbharaNamu lETikE maracEnAtamE karuNAshAli

 vEgamE prANaEshuDu rAgavaDO rADO jAgu jEsunO nAga vEnirOசாப்பு தாளம் - இது ‘அதீத எடுப்பு’ என்று சொல்லப்படும், தாளச்சுழற்சியின் ஆரம்பத்திற்கு ஒரு தட்டு முன்னதாகவே பாடலை ஆரம்பிக்கும் அமைப்புப்பெற்றது.  என் போன்ற குளியலறைப் பாடகர்களுக்குத் தாளம் போட்டுப் பாடவும் கடினமானது. பட்டாபிராமைய்யா தாள வேலைகள் நன்கு தெரிந்தவராக இருக்கவேண்டும். அவர்காலத்தில் (பத்தொன்பதாம் நூற்றாண்டு என்று அறிகிறேன்) தாள / இலயத்தை மனத்தில் இருத்திய நடனமணிகள் சதிராடிப் பாடியிருக்கவேண்டும். அவர்களை மரியாதையுடன் நினைத்துப்பார்த்துக்கொள்கிறேன்.


"ஜாகு சேயுனோ நாக வேணீரோ!"

விடாமல் துரத்துகின்றன இவ்வரிகள். பரிவும் ஆழ்ந்த காதலும் இல்லாமல் இப்படிப்பட்ட மொழி யாரிடமிருந்தும் வராது. 

இது என்ன மொழி? 

உபசார வார்த்தைகள் இல்லை. அரசியல் ரீதியாகச் சரிபார்க்கப்பட்டதில்லை. அதைப்பற்றிய கவலையும் இல்லை. அன்பு கொண்டவர்களிடத்திலே மட்டும் நாம் பாவிக்கும் அந்தரங்க மொழி இது. இது வலிந்து வரவழைக்கப்பட்டதல்ல - அன்பினாலே இயல்பாய் வருவது. அன்பில், காதலில் கரைந்து, 'கருணைக்கடல் பெருகி, காதலினால் உருகி' வந்த மொழி. 

அப்படித்தான் சொல்கிறாள், 'சேயுனோ'.  'ஓ' என்ற ஒலியில் நெருக்கம் அதிகமாகிறது.

ஆனால் 'வராத காதலனுக்காய்க் காத்திருந்து உன்னை வருத்திக்கொள்ளாதே' என்று பரிவில் சொன்னாலும் காதல் வயப்பட்டவளுக்கு அது கடுமையாகத் தானே தெரியும்? அதனால் உடனே தன் உள்ளத்து அன்பையெல்லாம் திரட்டிச் சொல்லுகிறாள் : 'நாகத்தைப் போன்ற மயிர்ப்பின்னல் உடையவளே'!

அதைச் சொல்லும்போது அவளைத் தாயன்போடு கட்டியணைத்திருப்பாளோ? இயலாமையின் பொருட்டு அப்போது அவள் கண்கள் நிறைந்திருக்குமோ? 

இந்த உணர்ச்சிக்கொந்தளிப்பைப் பாடலின் இசை நன்கு எடுத்துக்காட்டுவதாக எனக்குத் தோன்றுகிறது . 'வேணீ...ரோ' என்று குழைந்து  இழுத்துக் காட்டுகிறான் கைதேர்ந்த பாட்டுக்காரன். 

இன்னும் இது என்னை விட்டபாடில்லை...

Comments

Popular posts from this blog

உடையாத் தளைகள்

ஆஸ்பத் திரியில்
அம்மா கிடப்பு
சுருண்டொரு சாணித்
துணியது போலே
தேய்த்துக் குளித்தால்
அழுக்கது போகும்
ஒழுக்கம் விழுப்பம்
கற்க கசடற
மரபுக் கவிதை
அரபுக் குதிரை
ரோகம் பயங்கரம்
தேகம் இதுசுமை

குறே புஸ்தகங்ஙள், ச்சில ரிக்காடுகள், குறச்சு கள்ளு - ஒரு ஸாயான்னம்!

பக்கத்துவீட்டுமலையாளிநண்பர்நூல்வெறியர். பிடித்தநூலாசிரியரின்படைப்புகளையெல்லாம்தேடித்தேடிவாங்கிப்படித்துவிடுவார். அதிலும்தாட்டியானஉறைப்பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர். அப்படியானசேமிப்புகளில்அண்மைக்காலமாகபழையவைனைல்ரெக்கார்டுகளைவாங்கிச்சேர்க்கஆரம்பித்திருக்கிறார்.
ஒருமாலைநேரம்அவர்வீட்டுக்குபியருடன்புத்தகங்களைவேடிக்கைபார்க்கவெனநானேகேட்டுஅழைப்புவாங்கிக்கொண்டேன். போனதற்குஉடனேஒருஐ.பி. சிங்கரின்புத்தகம்இனாமாகக்கிட்டியது (அதேபுத்தகத்தின்ஹார்டுகவர்பதிப்பைஅவர்வாங்கிவிட்டார்). லேசில், இல்லை, எப்படியானாலும்புத்தகங்களைஇரவல்தருவதில்லைஎன்றும், பழையபுத்தகங்களைவாங்கியபழையபுத்தகக்கடையிலேயேதிரும்பவிற்றுவிடுவதுஎன்றும்கறாராகஇருப்பவரிடமிருந்துவந்தபுத்தகம்அரியதுதான். அன்றையபுதியஅறிமுகமாக The Limerick என்றபுத்தகத்தைகல்கத்தாவில்பழையபுத்தகக்கடையில்வாங்கியதையும், அங்கிருந்துவரும்வழியில்சிலர்அதைப்பற்றிவிசாரித்ததையும்சொன்னார். ஆயிரத்திற்கும்மேற்பட்ட, அதுகாறும்பிரசுரமாயிருந்தலிமரிக்குகளின்தொகுப்புஅது. அதன்தொகுப்பாசிரியரான Legman எழுதிய Rationale of the dirty joke என்றகடினஅட்டைப்புத்தகங்களையும் ( இ…

ஜெரி அமல்தேவ் - "மலரும் நினைவுகள்"

ஒருதலைராகம் வந்த நேரம் (கோவை கீதாலையா தியேட்டரில் 450 நாள் ஓடியது - அதனால், வந்த வருடம் என்று சொல்லவேண்டும்) படுத்த வாக்கில் இருக்கும் ஒலிநாடாக் கருவியை எங்கள் குடும்ப நண்பரொருவர் இரவல் தந்திருந்தார். கூடவே கொஞ்சம் நாடாக்களும் - அதிலே 60 நிமிடம் ஓடக்கூடிய நாடாவொன்றில் ஒன்றேகால் பக்கம் ஒருதலைராகம் பாடல்கள். மீதி முக்கால் பக்கத்தில் ஒருதலைராகம் நாயகன் சங்கர் நடித்து (பாசில் முதலில் இயக்கி, மோகன்லால் அறிமுகம் பெற்ற) பாடல்கள் பிரபலமடைந்த மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் பாடல்களைப் ‘பதிவு’ செய்திருந்தார்.
இரண்டுவார இரவலில் நாள்முழுதும் அதே நாடாவை தேய்த்திருக்கிறேன். வாசமில்லா மலரிது, ரீனா மீனா, கூடையில கருவாடு, குழந்தைபாடும் தாலாட்டு, கடவுள் வாழும் கோவிலிலே, நான் ஒரு ராசியில்லா ராஜா, என் கதை முடியும் நேரமிது என்று நாடாவில் வந்தபடி வரிசைக்கிரமமாகப் பாடுவேன் ("ஏண்டா உனக்கு வாயே வலிக்காதா?”). தொடரும் மலையாளப்பாட்டுகளை மனப்பாடம் செய்ய முடியவில்லை (மொழி அப்போது வசப்படவில்லை). ஆனால் மெட்டுகள் மனத்தில் அப்படியே தங்கிவிட்டன.
இன்றைக்கு ஏசியாநெட்டில் ஒரு நிகழ்ச்சியில் சங்கர். பழைய நினைவுகளை அவர் பகிர்ந்து…