முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

புத்தக 'மீம்' - பட்டியல்

மதியின் அழைப்புக்கு நன்றி. புத்தகப் பட்டியல் போடுவது எனக்கு ஒரு உவப்பான பொழுது போக்கு.

கைவசம் உள்ள புத்தகங்கள் : 100 - 120

படித்ததில் பிடித்தது:
1. பாரதியார் கதைகள்
(உரைநடை, நம்முடன் நேரடியாகப் பேசுவது போன்றது, பாசாங்கற்றது. பாரதியை இன்னும் புரியவைத்தது, நெருங்கச் செய்தது. புதுச்சேரியின் மீது இனம் புரியாத காதல் வரச் செய்தது)
2. வெள்ளிப் பாதசரம் - இலங்கை சிறுகதைகள் தொகுப்பு - செ. யோகனாதன் - தொ. ஆ.
(அற்புதமான கதைகள். வேறொரு புலத்தில்,என் மொழி பேசி, என் போல் உடுத்து என்னைப் போல் சிந்திக்கும் ஈழத்தமிழரை, அவரது சந்தோஷங்கள், அவலங்கள் முதலியவற்றை நான் அதுவரை அறிந்திராத அருமையான மொழியில் [தமிழ் இத்தனை இனமமையா!] அறிமுகப்படுத்தியது)
3. மானுடம் வெல்லும், வானம் வசப்படும் - பிரபஞ்சன்
("தமிழில் ஒரு நல்ல சரித்திர நாவல் இல்லையென்ற வசை இனி என்னால் ஒழிந்தது" என்று பிரபஞ்சனே சொன்னதை ஓரளவு ஒப்புக்கொள்ள வைத்தது. பாண்டிச்சேரியின் மீது மேலும் காதல் கொள்ளச் செய்தது)
4. வாடிவாசல் - சி சு செல்லப்பா
(என்ன சொல்லுவதென்று தெரியவில்லை)
5. ஸ்ரீரங்கத்து தேவதைகள் - சுஜாதா
(சுஜாதாவின் படைப்புக்களிலேயே இதைத் தான் உயர்ந்ததாகக் கருதுகிறேன். இதன் spontaneity எனக்கு மிகவும் பிடிக்கும். இன்றும் பலமுறை படிக்கிறேன்!)
6. சிறகுகள் முறியும், வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - அம்பை
(சமீபகாலங்களில் நான் படித்ததில் என்னை மிகவும் பாதித்தது. பெண்ணியம் பற்றிய புரிதல்களுக்கும், வாழ்க்கையில் பல விடயங்களில் ஒரு பரந்த நோக்கு உருவாவதற்கும் காரணமாய் அமைந்த தொகுப்புகள்)
7. PG Wodehouse - (எதையென்று சொல்ல?)


சமீபத்தில் வாசித்தது:
1. என் பெயர் ராமசேஷன் - ஆதவன்
2. The Motorcycle Diaries - Ernesto Che Guevara
3. மல்லிகை சிறுகதைகள் (2) - (தொகுப்பு: செங்கை ஆழியான்)
4. The Last Liberal - Ramachandra Guha

வாசித்துக் கொண்டிருப்பது: (படுக்கையில் இறைந்து ['றை' சரியா?]கிடக்கும் புத்தகங்களில் இருந்து ஜோசியக்காரன் கிளி மாதிரி ஒன்றைத் தேர்வு செய்து, புத்தகம் கையில் இருந்து நழுவும் வரை படித்தல்)

தமிழ்:

1. மௌனி சிறுகதைகள்
2. ஜி. நாகராஜன் சிறுகதைகள்

ஆங்கிலம்:
1. Natasha and other stories - David Bezmozgis
2. Selected stories of Anton Chekov
3. Passionate Nomad - The life of Freya Stark

பரணில், பிரிக்கப்படாத உறைகளில் பாதுகாப்பாக இருப்பவை
1. வண்ணதாசன் சிறுகதைகள்
2. வண்ணநிலவன் சிறுகதைகள்
3. அசோகமித்திரன் சிறுகதைகள்
4. அசோகமித்திரன் கட்டுரைகள்
5. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் - புஸ்பராஜ்
6. அரசூர் வம்சம் - இரா.முருகன்
7. புலிநகக்கொன்றை - பி.ஏ. கிருஷ்ணன்
8. ஜே ஜே சில குறிப்புகள் - சுரா
9. சரஸ்வதி களஞ்சியம்
10. The Valleys of the Assasins - Freya Stark
11. The Southern Gates of Arabia - Freya Stark
12. Moorish Spain - Richard Feltcher
13. The Wonder that was India - AL Basham
14. Picador Book of Cricket - Ramachandra Guha (Editor)

விளையாட்டைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்:

டிசே
பாலா
காசி
சுந்தர் பத்மனாபன்
ஈழநாதன்

கருத்துகள்

Santhosh Guru இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பட்டியல்.

சம்பந்தமில்லாத கமெண்ட் :

எனக்கு பாண்டிச்சேரியின் மீது எனக்கு காதல், பாரதியாரையும், பிரபஞ்சனையும் படிக்கமாலேயே வந்தது :). எனக்கு மிகவும் பிடித்த, நான் செட்டில் ஆக வேண்டும் என்று விரும்புகிற ஊர் பாண்டிச்சேரி என்னும் புதுவை.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
//விளையாட்டைத் தொடர நான் அழைக்கும் நண்பர்கள்:

டிசே
பாலா
காசி
சுந்தர் பத்மனாபன்
ஈழநாதன்
//

Hyperlinks to above mentioned blogs are not properly working :-(
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
Santhosh,

thanks! Pondicherry is a wonderful place - ofcourse, only next to Coimbatore :-)

Anonymous,

have corrected the hyperlinks
பத்மா அர்விந்த் இவ்வாறு கூறியுள்ளார்…
கன்னன்
பாண்டிச்சேரியில் அழகும் உண்டு. அதைவிட அவலங்கள் அதிகம் என்பது என் கருத்து. எனக்கு பாண்டிச்சேரி பற்றி நினைத்தாலே வருத்தமும் சினமும்தான் வருகிறது.சம்பந்தமில்லாத கருத்து.
Kannan இவ்வாறு கூறியுள்ளார்…
பத்மா,

சம்பந்தம் இல்லாத கருத்தெனினும் இங்கே இட்டமைக்கு/வந்தமைக்கு நன்றி.

புதுவையில் இரண்டு வருடங்கள் முதுகலைப் படிப்பு முடித்தேன். புதுவை குறித்த உங்கள் சினம் / வேதனை பகிர்ந்து கொள்ளக் கூடியதாக இருப்பின் அறிய விருப்பமாக உள்ளேன்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி

பெங்களூர் டயரி

பெங்களூரில் சர்ச் வீதியில் ப்ளாஸம்ஸ் என்கிற பழைய புத்தகக் கடை ஒன்றிருக்கிறது. இதில் வாரம் தோறும் ஒரு மணிநேரம் கழிக்கவென்று எனக்கு ஒரு நேர்த்திக் கடன். காபிடலிஸம் பற்றிய கார்ல் மார்க்ஸின் சித்தாந்தங்களைக் கரைத்துக் குடித்தாலென்ன என்று கால் மணிநேரம் கழியும். ஆண்டன் செக்காவ், மாப்பஸான் இன்ன பிற கிளாசிக் சிறுகதைகள் எல்லாவற்றையும் மொத்த விலைக்கு எடுத்துக் கொண்டு ஒரு வார விடுப்பில் ஏதாவது பீச் ரிஸார்ட்டில் காக்டெய்ல் உறிஞ்சிக்கொண்டே படித்துத் தீர்க்கும் அவாவும் கால் மணிநேரமே நீடிக்கும். அப்புறம் இந்த wild west பைத்தியம் இருப்பதால், லூயி லாமொரின் எல்லாப் புத்தகங்களையும் எடைக்கு வாங்கிக் கொண்டு போய் வீட்டிலே குப்பை சேர்க்கலாமென்று ஒரு எண்ணம் உதிக்கும். சுயசரிதை, வாழ்க்கைக் குறிப்புகள் பக்கம் சபலத்துடன் மேய்வதும், தடிதடியான சமையற்குறிப்புகள் மற்றும் wine பற்றிய புத்தகங்களைக் கையில் ஒரு தீர்மானத்துடன் எடுத்து வைத்துக்கொள்வதும் (திரும்பும் நேரம் நிச்சயமின்றி அவைகளை எதாஸ்தானம் செய்துவிடுவதும்) நடக்கும். மார்குவேஸின் மரியா என்கிற கதை தமிழில் சரியாகப் புரியவில்லையாதலால் ஆங்கிலத்தில் கடைசிப் பாராக்கள

பகற்கனவு

அலுவலகத்தில் எனக்கு மிகவும் பிடித்த பொழுது உணவு இடைவேளைக்குப் பின் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டு ட்ரீம் அடிக்கும் அந்த 30 நிமிடங்கள் தான். இதற்கப்புறம் ஒரு 10 நிமிடக் கோழித்தூக்கம் நிச்சயம் உண்டு. அலுவலக நேரத்தில் தூங்கியதால் ஊழியரை விட்டுக்கு அனுப்பின சம்பவத்திற்குப் பிறகுமா? என்று வாய் பிளக்காதீர்கள். சீனாவில் எங்கள் தலைமை அலுவலகத்தில் ஒரு 6 மாதம் வேலை பார்த்தேன். காலை 9 மணிக்கு அலுவலகத்தில் இருந்தாக வேண்டும். 11:45 க்கு மதிய உணவு. அப்புறம் கட்கத்தில் ஒரு பேப்பரை சுருட்டி வைத்துக் கொண்டு டூத் பிக்கினால் பல்லை நோண்டிக்கொண்டே இடத்திற்கு வந்து, இருக்கையை நகர்த்திப் போட்டு "joining kit" உடன் வருவதாக நான் சந்தேகப்படும் லேசான மெத்தையை விரிப்பது. ஷூவைக் கழற்றி ஒரு ஓரமாகப் போட்டு, கொஞ்ச நேரம் பேப்பரை மேய்வது. அப்புறம் லைட்டை எல்லாம் அணைத்துவிட்டு இழுத்துப் போர்த்திக்கொண்டு ஆனந்த சயனம். 2 மணிக்குத் தான் மறுபடி லைட் போடுவார்கள். ஒரு முறை 1 மணியளவில் உணவு முடிந்து அலுவலகம் வந்த போது, இருட்டான காரிடாரில் சுவற்றைத் தேய்த்துக் கொண்டே நடக்க வேண்டிவந்தது. இப்படி சுகமாக, இவ்வளவு ந