பிரபஞ்சனின் சிறுகதையொன்றில் ஒருவர் கடையில் இட்லி வாங்கிச்சாப்பிடுகிறார். பரிமாறுபவர் கேட்பார், “முதலில் சட்னியா, இல்லை சாம்பாரா? எதை ஊற்றட்டும்?” பாத்திரத்தினூடாகப் பிரபஞ்சனே (வரிகள் நினைவிலிருந்து) சொல்லுவார்: “ இந்தக் கேள்வியே பிடித்திருந்தது. சட்னிக்கும் சாம்பாருக்கும் வெவ்வேறு சுவைகள். இரண்டையும் ஒரே நேரத்தில் ஊற்றிக் கலந்து சாப்பிடுவது எனக்குப்பிடிக்காது” உணவைப் பரிமாறுவது சிலருக்கே கைவந்த கலை. நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத போது அது நிகழும்: ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு கடையில், கடனுக்காகத் தலையைக் காட்டின திருமணச் சாப்பாட்டுப்பந்தியில், இப்படி ஏதோ ஓரிடத்தில் சுவையானதுடன் மனதுக்கு நிறைவான சாப்பாடு சில பரிமாறுபவர்களின் தயவால் அமையும். 'உஸ்தாத் ஓட்டல்' திரைப்படத்தில் திலகன் பேசும் ஒருவரி வசனம் நினைவுக்கு வருகிறது: “வயிற்றை நிரப்ப யாராலும் முடியும், ஆனால் சாப்பிடுபவர்களின் மனது நிறைய வேண்டும். அதுதான் சரியான கைப்பக்குவம்” (படம்: நண்பன் மகேஷ்பாபு எடுத்தது) உறங்கும்போதும், உண்ணும் போதும் மனிதர்கள் குழந்தைகள் ...
கண்ணன் தட்டினது!