பக்கத்துவீட்டு மலையாளி நண்பர் நூல் வெறியர் . பிடித்த நூலாசிரியரின் படைப்புகளையெல்லாம் தேடித்தேடி வாங்கிப் படித்துவிடுவார் . அதிலும் தாட்டியான உறைப் பதிப்புகளை (Hard cover edition) வாங்கிச்சேர்ப்பவர் . அப்படியான சேமிப்புகளில் அண்மைக்காலமாக பழைய வைனைல் ரெக்கார்டுகளை வாங்கிச்சேர்க்க ஆரம்பித்திருக்கிறார் . ஒரு மாலை நேரம் அவர் வீட்டுக்கு பியருடன் புத்தகங்களை வேடிக்கை பார்க்கவென நானே கேட்டு அழைப்பு வாங்கிக்கொண்டேன் . போனதற்கு உடனே ஒரு ஐ . பி . சிங்கரின் புத்தகம் இனாமாகக் கிட்டியது ( அதே புத்தகத்தின் ஹார்டு கவர் பதிப்பை அவர் வாங்கிவிட்டார் ). லேசில் , இல்லை , எப்படியானாலும் புத்தகங்களை இரவல் தருவதில்லை என்றும் , பழைய புத்தகங்களை வாங்கிய பழைய புத்தகக் கடையிலேயே திரும்ப விற்றுவிடுவது என்றும் கறாராக இருப்பவரிடமிருந்து வந்த புத்தகம் அரியதுதான் . அன்றைய புதிய அறிமுகமாக The Limerick என்ற புத்தகத்தை கல்கத்தாவில் பழைய புத்தகக் கடையில் வாங்கியதையும் , அங்கிருந்து வரும் வழியில் சிலர் அதைப்பற்றி விசாரித்ததையும் ...
கண்ணன் தட்டினது!