Monday, September 10, 2007

வாஷிங் மஷின் காதை

வூட்ல வாஷிங் மஷின் ஊத்திக்கிச்சு.

ஒரு வாட்டி அவசரத்துல துணியெல்லாம் போட்டு, ஸ்விச்ச ஆன் பண்ணினதுக்கப்புறம் தான் சோப்புப் பொடி போடலன்னு ஞாபகம் வந்தது. அப்படியே ஸ்விச்ச ஆஃப் பண்ணிட்டு பொடியப் போடலாம்னு பாத்தா, ஆனான பாடு பட்டும் வாஷிங் மஷின் மூடி தொறக்கமாட்டேன்னுடிச்சு. எடுத்த காரியத்த முடிக்காம நடுவுல லூஸ்ல உடறது நம்பள மாதிரி அதுக்குப் பழக்கமில்ல போலிருக்கு. ஆனா, சோப்புப் பொடியே இல்லாம, தோச்சுத் தான் தீருவேன்னு அது நிக்கும்போது "கடம உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையாப்பா" அப்படீன்னு தான் நெனக்கத் தோணிச்சு.

அதுல என்ன ஃபஸ்ஸி லாஜிக்கோ என்ன எழவோ, அதுக்கப்புறமா அது ஓடறதே இல்ல. ஏதோ ஒரு ஸ்டேட்ல அப்படியே நின்னுடிச்சி போல. எல்லா ஸ்விச்சயும் ஆஃப் பண்ணிட்டுப் போட்டா முதல்ல இருந்து ஓடும்னு நான் நெனைச்சா, போன வாட்டி எங்க உட்டமோ, அங்கிருந்து தான் நான் ஆரம்பிப்பேன்னு அது நெனைக்கிது. இந்த மாதிரி யோசிக்கிற மஷின் வாங்கறதுக்கு முன்னாடி நாம யோசிக்கணும் - அத விட நாம புத்திசாலியா இருக்கமான்னு. பேஸிக்கா, அது என்ன யோசிக்குதுன்னு நமக்குத் தெரியணும்.

(நல்ல வேளையா) இத நான் வாங்கல. வாடகை வீட்டோடையே வந்தது. வூட்டுக்காரர் ஏற்கனவே வச்சிருந்தது. அதோட கோனார் கைடு நம்ம கிட்ட இல்ல. ஸ்விச்சிலையோ படம் படமா போட்டிருக்கு, எழுத்து எங்கயுமே இல்ல. தொவை, காயப்போடு, அலசு - அப்படீங்கறதுக்கு என்ன படம்னே யோசிக்கத் தெரியல. இருக்கற படத்தப் பாத்து இந்த மூணு விஷயத்தோட பொருத்திப் பார்க்க முடியல. சின்ன வயசுல பெரியம்மாவோட தையல் மஷின்ல இருக்கற சக்கரம், கீழ இருந்து நூல விடற ஒரு பொறி (பாபி பின்னா?) இதெல்லாம் என்னன்னு தெரியாமலே, அத ட்ரெயின் இஞ்சின்னு இமாஜின் பண்ணிக்கிட்டு, நாமளே எதையோ திருகி என்னமோ பண்ற மாதிரி பில்டப்பு குடுத்து, மக்கானிக்கு கணக்கா வண்டியோட்டின மாதிரி, இப்போ கையில கிடச்சதயெல்லாம் திருகி ஒவ்வொரு வாட்டியும் இந்த வாஷிங் மஷின ஓட்டறேன்.

ஆனா தொவைக்க மாட்டேங்குது. எங்க வூட்டு சின்னப் பொண்ணுக்கு நான் பல்லுத் தேச்சி விடறேன்னு சொன்னா கேக்க மாட்டா. தானே தேய்க்கிறேன்னு போயி பேஸ்டக் கொஞ்சம் சாப்டிட்டு, சைட்ல திருட்டுத்தனமா தண்ணியக் குடிச்சிட்டு, தண்ணீல வெளையாடிட்டு ஆ..ஊ..ன்னு சவுண்டு விட்டுட்டு வந்திருவா. அந்த மாதிரி என்னமோ 747 ஃப்ளைட்டு கெளம்புற மாதிரி சவுண்டு எல்லாங்குடுத்துட்டு 40 நிமிஷம் ஓடுது இது. அப்புறமா எடுத்துப் பாத்தா, சோப்புப் பொடியெல்லாம் திட்டுத்திட்டா துணிமேலெயே இருக்கு. கொஞ்சம்கூட அழுக்குப் போன மாதிரியில்ல.

எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன்.

7 comments:

ஜெஸிலா said...

ஏதோ ஒருநாள் செஞ்சிட்டு அலுத்துக்கிறீங்க இதைத்தானே உங்க வீட்டு பெண்கள் இத்தனை நாட்கள் செஞ்சாங்க? :-)

Anonymous said...

ஆமாங்க ஜெஸிலா, நீங்க சொல்லுறதும் சரிதான்...

klsrini said...

Ennada, Mathikare vaazhka nyabagam-varutha ???

Kiran said...

I really liked ur post, thanks for sharing. Keep writing. I discovered a good site for bloggers check out this www.blogadda.com, you can submit your blog there, you can get more auidence.

மதி கந்தசாமி (Mathy Kandasamy) said...

couldn't wait for the tamil fonts. so this thanglish comment.

//
எல்லாத்தையும் வெளிய எடுத்து, இடுப்பு ஒடியக் குனிஞ்சு நிமிந்து நானே அலசிப் புழிஞ்சு காயப்போட்டேன்.//

thought of just peeping in and read the post written in september only in december! :)


anywayz, ithaRkuththaanae kaathirunthaay naNbaa. ensaai. ;)

nice to read the post.
(en kashtam unakkup nice'aannu kaekkakkoodaathu!)

-Mathy

enRenRum-anbudan.BALA said...

Kannan,
Now only, I am seeing this post thanks to dynobuoy (from twitter)

Great Humour in this particular 'washing' experience of yours :)

Anonymous said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond. Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com