Tuesday, June 14, 2005

கற்றுக்குட்டி

இன்றைக்கு ஆட்டோவில் அலுவலகம் வந்தேன். ஆட்டோ மீட்டரின் துடிப்பும் என் இதயத் துடிப்போடு இணைந்து பதற்றமாகக் கழிகின்றன நாற்பது நிமிடங்கள். அறுபத்தி ஐந்து ரூபாய் காட்டியது மீட்டர். பதினொன்று கி.மீட்டர்களுக்கும் குறைவான தூரம். ஐம்பத்து ஐந்து ரூபாய் சரியாக இருந்திருக்கும். ஒரு புறம் ஆட்டோக்காரனது வாழ்க்கையை நினைத்துக் கொண்டாலும், நான் ஏமாற்றப் படுகிறேன் என்பது எனக்கு மிகுந்த மனக்கஷ்டத்தைக் கொடுக்கிறது. சரியாக ஓடும் மீட்டர் பொருத்தப் பெற்ற ஆட்டோக்களில் இரண்டு ரூபாயில் இருந்து ஐந்து ரூபாய் வரை நான் சில்லறை பெற்றுக் கொள்வதில்லை. நண்பியுடன் ஆட்டோவில் போகும்போது அவள் பேசுவதைக் கேட்காமல் நான் மீட்டரை எரித்துவிடுவது போலப் பார்ப்பதில் அவள் இப்போதெல்லாம் அதோ பார் அம்புலிமாமா என்கிற ரீதியில் என் கவனத்தை மீட்டரினின்றும் திருப்புகிறாள். என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன்.

***

மத்தியத் தர வர்க்கத்தின் பிறவிப் பயனை அடையப் போகிறேன். ஆம் - ஒரு வீடு கட்டப்போகிறேன். சுதந்திரம், மற்றும் பாதுகாப்பு கருதி தனி வீட்டுக் குடியிருப்புகள் கட்டித்தரும் நிறுவனம் ஒன்றில் சதுர அடிக்கு இன்ன விலை என்று வீடு கட்டித்தரும் உடன்படிக்கையில் கையெழுத்திட்டேன். வாஸ்து, இன்ன பிற கிரக தோஷங்களை நிவர்த்தி செய்தல், வீட்டின் உள்ளே நூலகம், சின்னதொரு 'பார்' மேடை என்று 1800 சதுர அடிகள் திட்டமிட்டது, 2000 ச.அ. என்று முடிந்தது. இப்போது அந்நிறுவனம், உடன்படிக்கையின் போது திட்டமிடப்பட்ட 1800 ச.அடிகளுக்கே குறிப்பிட்ட தொகை செல்லுபடியாகும் என்றும், மேலதிக 200 அடிகளுக்கு, தற்போது வழங்கி வரும் புதிய விலை கொடுக்கவேண்டும் என்றனர். உடன்படிக்கையில் அம்மாதிரி சொல்லவில்லை - மேலும், 1800 ச.அடிகள் என்பது ஒரு அனுமானம் தானே? ஒருவேளை என் திட்டம் 1600 ச.அடிகளாகும் நிலையில் தற்போதைய விலையின் படி அது நிர்ணயிக்கப் படுமா என்றெல்லாம் நான் கேட்டதற்கு, வேண்டுமானால் உங்கள் திட்டத்தை 1800 ச. அடிகளுக்கே மாற்றிக் கொள்ளுங்கள் என்றார்கள். வந்த கோபத்தில் நான் என்ன செய்தேன் தெரியுமா? வேறென்ன, அதிக விலை கொடுக்க ஒப்புக்கொண்டுவிட்டேன்.

இங்கே நான் அந்தப் பெரிய நிறுவனத்தின் பால் வைத்த நம்பிக்கை வீண்போனது தான் எனக்குச் சகிக்க முடியவில்லை. எதிலும் transparency இல்லாத மறைமுகமான செயல்பாடுகள் எனக்கு பயத்தையே கொடுக்கிறது - இனி என்ன செய்வார்களோ!

***

சக மனிதர்மேல் நாம் வைக்கும் நம்பிக்கை பொய்க்கும்போது 'மரமேறிக் கைவிட்டவன்' போல ஆகிவிடுகிறது நிலைமை. இம்மாதிரியான விடயங்களை, ஒரு சகஜ மனப்பான்மையோடு பார்க்கும் ஜீவன்முக்தி நிலை எனக்குக் கைவரமாட்டேன் என்கிறது. என் வார்ப்பும் வளர்ப்பும் சமூகத்தைக் குறித்த என் பார்வைகளையும், புரிதல்களையும் உளவியல் ரீதியாக இப்படி பாதித்திருக்கிறது என்று நினைக்கிறேன். இதிலிருந்து ஒரு முக்கியமான அவதானம்: நான் ஏமாற்றுகாரனாக இருக்கவும், ஏமாற்றப் படுவதையும் மிகவும் வெறுக்கிறேன். ஆட்டோவானாலும், வாழ்க்கையே ஆனாலும், இந்த மிகை உணர்விலிருந்து மீண்டால் ஆட்டோப் பயணம் மட்டுமல்லாமல், வாழ்க்கைப் பயணமும் பதற்றமற்றதாக இருக்கலாம் எனக்கு.

13 comments:

வீ. எம் said...

kannan : இந்த இரண்டு சம்பவமும் நடந்தது சென்னையிலா? இல்லை பெங்களூரிலா???
சென்னையாக இருக்காது என உறுதியாக நம்புகிறேன்... ஏன் என்று தங்கள் பதிலை பார்த்தவுடன் சொல்கிறேன் !

PositiveRAMA said...

ஆம்! வீ.எம். இது சென்னையில் நடந்திருக்காது..ஏனென்றால் சென்னை ஆட்டோகாரர்கள் மீட்டரே போட மாட்டார்கள். ஆட்டோவுக்கும் சேர்த்து விலை கேட்பார்கள். இதுக்கெல்லாம் ஒரு விடிவு காலம் எப்போதான் வருமோ? கண்ணா! "கவலப்படாதே சகோதரா.."

rajkumar said...

பிரமாதம்

தாசரதி/Dhasarathy said...

சுற்று மின்னஞ்சல்...நீங்கள் பெங்களூரில் இருந்தால்....உபயோகாமா இருக்கும்னு நெனைக்கிறேன்.

*****

Hi,
During the last 6 month in Bangalore, I perceived that local commutation here is really exasperating, particularly when you rely on Public transport and has not plan for your own conveyance. I am trying to take some steps, I don't know weather it will be prolific or not, for that i talked to controller office of Auto Unit. That person ensured that no auto person is allowed to ask 1.5 times of charges before 10:00 PM , neither the Auto person will be given extra money during rain. I 've suffered a lot due to auto behavior that during rain or even at 8:00 they start asking extra money.
So there are Auto Complain Unit phone no (Bangalore),please note these -
22253500
22260554
22207750
Please be proactive atleast for the things you can really be benefited. Any time you phase any problem related to Auto Rickshaw call to these no, telling the Auto no. Please also try to spread as much awareness as you can. Together we can make the place better for living.

Thanks!!!!!
*****

Dhasarathy

Kannan said...

வீ.எம், positiverama: பெங்களூரைப் பற்றித் தான் சொன்னேன்.
ராஜ்குமார்: மிக்க நன்றி!
Dhasarathy: தகவலுக்கு நன்றி.

வீ. எம் said...

அதானே பார்த்தேன்... சென்னையா இருந்திருந்தா நீங்க சொன்ன 11 கிமி க்கு மீட்டரே இல்லாம 85 ரூ கேட்டிருப்பாரு நம்ம ஆட்டோ அண்ணாச்சி..
நான் ஒரு வாரம் வேலைக்கு ஆட்டோ ல வந்தேன் (வேற வேற ஆட்டோ)..
என் வீட்ல இருந்து அலுவலகம் சரியா 4.8 கிமி.. கீழே ரேட் பார்துக்கோங்க..
முதல் நாள் : மீட்டர் இல்லை - 60 ரூபாய் கேட்டு 45 க்கு பெரிய மனசு பன்னி 45 க்கு வந்தாரு.
இரண்டாவது நாள் - ஒரு ஆட்டோ அண்ணாச்சி 50 கேட்டாரு... மீட்டர் போடுங்கனு பேசி உக்கார்ந்தேன்..
45.60
மூன்றாம் நாள் - மீட்டர் : 48.20
நான்காம் நாள் - மீட்டர் - 35.20 (கொஞ்சம் பொழைக்க தெரியாத ஆளு போல)
5ஆம் நாள் - எவ்ளோ தருவீங்கனு கேட்டாரு சும்மா 35 நு சொன்னேன்.. அவர் 45 நு சொன்னாரு..அடிச்சு பேசி 40 கு போனேன் !!

நியாமா மீட்டர் ரேட் பார்த்தா , 23.00 ரூ தான் இருக்கணும்.. சரி பெட்ரோல் , விலைவாசி எல்லாம் பார்த்து ஒரு 30 , 32 வாங்கலாம்...... ஆனா 45, 50 வாங்குறாங்க ..என்ன பன்றது??

இது தான் சென்னை ஆட்டோ !! :)
பெங்களூர்ல ஆட்டோ கொஞம் நியாயமா இருப்பாங்க கேள்விப்ட்டேன்... இல்லையா????

வீ எம்

செல்வராஜ் (R.Selvaraj) said...

கண்ணன், அருமையாக எழுதி இருக்கிறீர்கள். புது வீட்டுக்குச் சொந்தக்காரராக ஆனதற்கு வாழ்த்துக்கள். நீங்கள் கூறிய உணர்ச்சிகளைப் பலமுறை அனுபவித்திருக்கிறேன். நீங்கள் மட்டும் தனியல்ல. இப்போதும் கூட என்னுடைய கார் பழுது பார்க்க எண்ணூறு டாலர் கேட்பவன் எவ்வளவு ஏமாற்றுகிறான் என்று மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. வேறு இடம் சென்றாலும் இவனுக்குப் பதில் இன்னொருவன் என்று ஒரு சலித்த மனப்பாங்கே ஏற்படுகிறது.

>>நான் ஏமாற்றுகாரனாக இருக்கவும், ஏமாற்றப் படுவதையும் மிகவும் வெறுக்கிறேன்.>>

அதே அதே.

enRenRum-anbudan.BALA said...

//என்னை மட்டும் இந்த அற்பவிடயம் இவ்வளவு பாதிப்பதேன் என்று யோசித்திருக்கிறேன்.
//
enakkum appatith thAn, kannan :)
enavE, varuththap patAthIrkaL ;-)
maRRapati, puthu vIdu kattiyathaRku en vAzththukkaL !!!

Kannan said...

செல்வா,

வாழ்த்துக்கும் புரிதலுக்கும் நன்றி. வீடு இன்னும் பத்து மாதங்களில் நிறைவு பெறும்.

Kannan said...

பாலா,

நன்றி!!!

Kannan said...

வீ. எம். : அந்த வகையில் பெங்களூர் ஆட்டோக்களே மேல்...

Kicha said...

கண்ணன், நானும் அப்படி யோசித்தது உண்டு. ஒரு புறம் அவர்கள் கேட்டத் தொகையை கொடுப்பது இருக்கட்டும். சில நேரங்களில் மொழி பிரச்சனைகளாலும், பின்விளைவுகளின் பயத்தினாலும் ஆட்டோக்காரர்களை எதிர்த்து ஒரு கேள்வியும் கேட்காமல் வந்துவிட்டு என் கோழைத்தனத்தை நினைத்து நொந்துக்கொள்வதும் உண்டு.

சென்னைக்கும் பெங்களூருக்கும் வித்தியாசம் என்று பார்த்தால் -

1) நாம் எவ்வளவுக்கு ஏமாற்றப்படுகிறோம் என்று முன்னரே தெரிந்துகொள்ளுவது சென்னையில். பெங்களூரில் இது சேருமிடம் சேர்ந்த பின்னரே தெரியவரும்.

2) சென்னையில் ஒரு ஆட்டோக்காரர் ஒற்று வரவில்லை என்றால் இன்னொருவரையோ அல்லது மாற்றாக பேருந்தையோ, மின்சார ரயிலையோ நாடமுடியும். ஆனால் பெங்களூரில் அப்படியல்ல. தப்பித்தவறி மீட்டர் சரியில்லாத வண்டியில் ஏறிவிட்டால், அன்றைக்கு ஏமாற்றம் என்பது ஏரத்தாழ உறுதி.

எங்கும் சந்தர்ப்பவாதிகள் நிறைந்துவிட்டனர். ஆக, ஏமாற்றம் என்பது சென்னையிலோ பெங்களூரிலோ இல்லை. எல்லாம் நம் விதியில் தான் என்று விதியை நோகவேண்டியிருக்கிறது.

Quit Smoking said...

Hi, I was just looking around some blogs and checking different templates for ideas. Good blog with a nice template. I can start my own blog on ebooks thanks to your blog. I will visit weekly by the way. Like your ideas.