முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

கவிதையின் உட்பொருளைக் 'கண்டுபிடித்தல்'

படம் தந்துதவியது நண்பன் மோகன் பெருமாள்  பள்ளிப்பருவத்தில் திருவள்ளுவரையோ, கம்பரையோ, இளங்கோவடிகளையோ, ஷேக்ஸ்பியரையோ, கீட்ஸையோ புரிந்துகொள்ள ஆசிரியரின் துணை வேண்டியிருந்தது. கோனார் நோட்ஸும் அவ்வப்போது கைகொடுத்தது (என்று சொல்லவும் வேண்டுமோ? [வேண்டாம்]). கவிதை என்பது ஒரு விடுகதை போலவென்றும், அதன் முடிச்சை அவிழ்க்கும் வித்தை சிலபேருக்கு மட்டும் கைகூடுகிறதென்றும், கவிதை வாசித்தலின் குறிக்கோள் அதன் உட்பொருளை அறிந்துகொள்வதே என்றும்தான் அன்றைக்கு நான் புரிந்துகொண்டது.  இன்றைக்கு  பில்லி காலின்ஸின் (Billy Collins) இந்தக் கவிதையுடன் மிகவும் ஒன்ற முடிகிறது. கவிதை அறிமுகம்   - பில்லி காலின்ஸ் (தமிழில்: மகேஷ்) கவிதையை ஒரு ஸ்லைடைப் போல  வெளிச்சத்தின் முன்னே  தூக்கிப்பிடியுங்கள் என்றுதான்  அவர்களை க்   கேட்கிறேன் அல்லது அதன் கூட்டில் காதை வைத்துக்கேளுங்கள்  அதனுள்ளே ஒரு சுண்டெலியை போடுங்கள் அது தன் வழியைத்தேடி வெளிவருவதை காணுங்கள் அல்லது அதனுள்ளே நடவுங்கள்,   அதன் சுவர்கட்குள் விளக்கின் சுவிட்சுக்காகத்  துழாவுங்கள்  அவர்களை கவிதையின் பரப்...

ஒரு கெட்டிக்காரக் 'கவிதை'

Photo by Andreea Popa on Unsplash முதலில், பின்னணி: இதையும் , இதையும் படித்து / பார்த்துவிடுங்கள்                            அவையத்து முந்தி யிருப்பச் செயல்                             வையத்து முந்தியிருப்பச் செயல்                                     முந்தி யிருப்பச் செயல்                                           இருப்பச் செயல்                                                   செயல் (ஐயன் பொறுப்பாராக)

கவிஞர் சின்சின் எழுதிய இருவரிக் கவிதையை முன்வைத்து...

சுவர்க்கோழி கத்த  டிவியை அணைத்தேன்  என்ற  (யாரோ எழுதிய -  கணையாழியில் படித்த நினைவு, கவிஞர் பெயர் நினைவில்லை; மன்னிக்க  ) நவீன ஹைக்கூவிற்கு அறைகூவலாக என் நண்பரும் கவிஞருமான சின்சின் எழுதிய இருவரிக் கவிதை தமிழின் பரிசோதனைக் கவிதைகளின் (avant-garde) வரிசையில் விதந்தோத வேண்டியதொன்றாகும்.  முதலில் மேற்குறிப்பிட்ட 'ஹைக்கூ'வில் கவியின்பத்தைத் தாண்டி நிற்பது அதன் 'கெட்டிகாரத்' தன்மையே. முதல் வரிக்கும் இரண்டாம் வரிக்கும் இடையில் மொக்கவிழ்வது போல மனதினில் மலரும் கவிதைத் தருணம் இல்லாதாகிறது. தீவிரமான மன அவஸ்தையினின்றும் ஊற்றெடுப்பதே கவிதை என்றாலும், கவிஞன் வார்த்தைக் கோர்ப்பில் தேர்ந்த கைவேலைக்காரனாயிருத்தலும் அவசியமாகிறது. ஆனால் இந்த வார்த்தைக்கோர்ப்பே கவிதையாவதில்லை. தான் பெற்றெடுத்த கவிதையின் அழகியலை க்  கட்டமைப்பதும், சொற்களின் ஒலியமைப்பைச் சரிவர இருத்துவதும் மட்டுமே இவ்வார்த்தைக்கோர்ப்பின் இலக்கு. நவீனக் கவிதை தொடை நயங்கள் போன்ற ஓசையொழுங்குகளைச் சட்டை செய்வதில்லை. அதனால் கணக்கு பிணக்கு என்று பாசுரம் அமைக்கவும் தேவையில்லை. ஆனால் கெட்டிகாரத்தனத்தையே கவிதையாக்...

உடையாத் தளைகள் - பிற்சேர்க்கை

உடையாத் தளைகள் படம் தந்து உதவியது நண்பன்  மகேஷ் உடலிற் பிணைத்த துயிரின் தளையே வாழ்விற் பிணைத்தது உறவுத் தளையே ஒழுங்கினிற் கட்டுதும் மொழியின் தளையை மொழியினிற் கட்டுவம் பொருளாம் தளையும் மனத்திற் பிணைந்தது ஆசைத் தளையாம் ஒன்றாத் தளைகள் அறுவது மில்லை இதுமோர் இயற்சீர் வெண்டளைக் கட்டே மாமுன் வரும்நிரை விளம்முன் வரும்நேர்

இராமநாதம் (வேறு)

MD இராமனாதன் தோடியில் ஒரு விருத்தம் பாடுகிறார். பாடும்போதே அவ்வப்போது பாடலின் கவியின்பத்தை விளக்குகிறார். முடிவில் அவையில் ஒருவர் அந்தப் பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். அதற்கிணங்கி இராமனாதன் ஆங்கிலத்தில் அதை விளக்குகிறார்.  அவை குலுங்குகிறது.  ஒருவர் சொல்லுகிறார் "Sir, the meaning was as beautiful as your Thodi!" அதற்கு ஒரு குழந்தைச் சிரிப்பு சிரிக்கிறார் MDR!  '“மற்றவர்கள் வாதாபி கணபதிம் பாடும்போது அன்னப்பறவை நீந்துவது போல இருக்கும். நீங்கள் பாடுகிறபோது யானை நடப்பதுபோல இருக்கிறது” என்று சொன்னபோது எம்.டி.ஆரின் ஒன்றரைக் கண்ணில் ஒரு முதிர்ந்த குழந்தையின் சிரிப்பு’ என்று கவிஞர் சுகுமாரன் தனது MDR சந்திப்பு குறித்து ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வந்தது.  YouTube சுட்டி இப்போது வேலை செய்யவில்லை :( இருந்தால் அந்த தோடி விருத்தத்தின் கடைசி ஒரு நிமிடமும் இராமநாதனின் பாடல் விளக்கத்தையும் கேட்டிருக்கலாம். அப்புறம் என்னை மிகவும் பாதித்த அந்த பத்து நொடி உரையாடலும்... கலைஞனிடம் இப்படி நெருங்கி அவன் கலையைப் பற்றிச் சிலாகித்தலும் கலைஞன் அதை...

காற்புள்ளிகளுக்கு இடையில் தொலைந்து போவது எப்படி?

படம் தந்து உதவியது நண்பன் மகேஷ் பிரிகேட் ரோடும் எம் ஜி ரோடும் இணையும் சாலைச் சந்திப்பில் அந்நாட்களில் முழங்கையிலிருந்து தோள்ப்பட்டை வரையிலும் விதவிதமான கடிகாரங்களைக் கோர்த்துக்கொண்டு, மூக்கிலும் மண்டையிலுமாக ஐந்தாறு கண்ணாடிகளையும் அணிந்து கொண்டு, அங்கே சமிக்ஞைக்காக நின்று கொண்டிருக்கும் வாகனங்களின் அருகில் வந்து “சார் ஃபாரின் வாட்ச்” என்று காட்டுபவர்களை நான் கண்டுகொண்டுகொள்ளாமல் முகத்தைத் திருப்பிக்கொள்வது, ஒருவேளை விற்பவனுடன் பேச்சுக்கொடுத்தால் எதையேனும் வாங்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிவடுவோமோ என்ற பயம்தான் காராணம் என்று ஒப்புக்கொண்டு மேலும் சொல்வேன், அன்றைக்கு என் இருசக்கர வண்டியில் பின்னால் சஞ்சீவன் என்ற என் தளபதி, சித்தி மகன் (தம்பி உடையான் படைக்கஞ்சான்) விதியின் உருவத்தில் உட்கார்ந்திருக்க, அந்த சாலைச் சந்திப்பில் நாங்கள் நின்றிருந்தபோது ஒரு பரட்டைத் தலை தடியன் மேற்சொன்ன ஃபாரின் வாட்ச் சமாசாரங்களுடன் எங்களை அணுக, நான் வழக்கம் போல முகத்தைத் திருப்பிக்கொண்டாலும் சஞ்சீவன் அவனிடம் பேச்சுக்கொடுத்து, ஒரு வாட்சைப் பரிசோதித்து, நான் “இதென்ன தீரம்!” என்று வியந்துகொண்டிருந்தபோதே ப.த.தடியனி...

எழுதிச் செல்லும் கையின் விதி

 “ எழுதிச் செல்லும் விதியின் கை ”  யா ர்   முதலில் சொன்னது ? உமர் கைய்யாமின் ருபாயத்   ஒன்றில் வந்து தமிழ்ப்படுத்தப்பட்டது என்றறிகிறேன் .  இன்றைக்கு மீண்டும் வானொலியில் ‘ ஆயிரம் மலர்களே மலருங்கள் ’  -  எப்போது கேட்டாலும் சலிப்பதில்லை .   ‘ எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ ’   கேட்கும்போது   எப்போதும் தொண்டைக்குழி   அடைத்துக்கொள்கிறது .  இது ஏனென்று புரியவில்லை . அண்டங்கள் கடந்த பெருவெளியின் பிரம்மாண்டத்தின் முன்னால் ஒரு மணல்த் தரியளவும் காணாத அற்ப மனிதவாழ்வின் பதைபதைப்பு என்று கொள்கிறேன் .   இந்தக் கை எங்கும் நிறைந்தது .  சந்தைப் பொருளாதாரத்தை நிலைநிறுத்தும் 'கண்காணாக் கை'யும்  இதுதான்  போலும்.  கூடவே ஏனோ நினைவுக்கு வரும் கொசுறு பிரமிளின் இந்தக் கவிதை :   “ சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று காற்றின் தீராத பக்கங்களில் ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது .”

மனது நிறையச் சாப்பாடு

பிரபஞ்சனின் சிறுகதையொன்றில் ஒருவர் கடையில் இட்லி வாங்கிச்சாப்பிடுகிறார். பரிமாறுபவர் கேட்பார்,  “முதலில் சட்னியா, இல்லை சாம்பாரா? எதை ஊற்றட்டும்?”   பாத்திரத்தினூடாகப் பிரபஞ்சனே (வரிகள் நினைவிலிருந்து)   சொல்லுவார்:  “ இந்தக் கேள்வியே பிடித்திருந்தது. சட்னிக்கும் சாம்பாருக்கும் வெவ்வேறு சுவைகள். இரண்டையும் ஒரே நேரத்தில் ஊற்றிக் கலந்து சாப்பிடுவது எனக்குப்பிடிக்காது”  உணவைப் பரிமாறுவது சிலருக்கே கைவந்த கலை.  நீங்கள் முற்றிலும் எதிர்பார்க்காத போது அது நிகழும்:   ஊர் பெயர் தெரியாத ஏதோ ஒரு கடையில், கடனுக்காகத் தலையைக் காட்டின திருமணச் சாப்பாட்டுப்பந்தியில், இப்படி ஏதோ ஓரிடத்தில் சுவையானதுடன் மனதுக்கு நிறைவான சாப்பாடு சில பரிமாறுபவர்களின் தயவால் அமையும். 'உஸ்தாத் ஓட்டல்' திரைப்படத்தில் திலகன் பேசும்  ஒருவரி  வசனம் நினைவுக்கு வருகிறது: “வயிற்றை நிரப்ப யாராலும் முடியும், ஆனால் சாப்பிடுபவர்களின் மனது நிறைய வேண்டும். அதுதான் சரியான கைப்பக்குவம்” (படம்: நண்பன் மகேஷ்பாபு எடுத்தது)  உறங்கும்போதும், உண்ணும் போதும் மனிதர்கள் குழந்தைகள் ...

தமிழ்சார் தொல்லை

  ஒருவரின் பெயர் ‘ சார் ’ என்ற விகுதியுடன் இருக்கமுடியுமா ? ஆனால் “ என் கணக்கு வாத்தியார் கணேசன் சார் ” என்றால் யாரும் கண்டுகொள்வதில்லை . இது பெரிதும் எரிச்சலூட்டக்கூடியது . ஒருவேளை சாருக்கு பதில் ஐயா என்றிருந்தால் இவ்வளவு எரிச்சல் இருக்காதோ ?   இந்த கணேசன் சார் , கீதாமேடம் போன்றவை ஒரு வகையென்றால் இதை அடுத்த தளத்திற்கு உயர்த்துவது ‘ டியூசன் சார் ’, ‘ சும்மிங் சார் ’ போன்றவை .  “ என் பையனோட வயலின் சார் இருக்காரே , அவர் பெரிய மேதை !” -- இதில் “ சார் ” விளி பெயரையல்லாமல் கற்பிக்கும் தொழிலைக்குறிக்கிறது .  இதில் கலாச்சாரம் ( உடை ) சாரந்த மொழி உளவியல் இருப்பதாக நினைக்கிறேன் . அதாவது , வேட்டியைக் கச்சையாகக் கட்டிக்கொண்டு தலையில் உருமாலுடன் இருப்பவர் குஸ்தி ‘ வாத்தியார் ’. நீளக்காற்சட்டையுடன் ‘ இன் ’ பண்ணிக்கொண்டு கான்வாஸ் காலணி அணிந்திருப்பவர் கராத்தே “ சாரே ” யாவார் . நகரங்களில் இந்த வழக்கம் எல்லாத்ததட்டு மக்களிடயையேயும்   வெகுவாகப் பரவிக்கிடக்கிறது .  பேச்சுத்தமிழ் தனதாக்கிக்கொண்ட பல வேற்றுமொழ...