திரையிசையை (பரப்பிசை என்று சொல்லமாட்டேன் - இப்படியாகத்தானே அப்பிரகாம் பண்டிதர் வழிவந்தவர்கள் இசைக்கான தமிழ்வார்த்தைகள் மட்டுமல்லாது, தற்காலத்தமிழே அவர்கள் கண்டெத்தியதுதான் என்று பீற்றிக்கொள்ள அவகாசம் கொடுக்கமாட்டேன்) மரபிசை இலக்கணங்களைக் கொண்டு அளவிடவோ விமர்சிக்கவோ கூடாது என்பது தெளிவானவொன்றாகவே எனக்குத் தோன்றுகிறது. ஆனால் மரபிசை ரசனையை / அனுபவத்தை புறவயமான புண்ணாக்கு இலக்கணம் சார்ந்தது மட்டுமே என்று குறுக்குவது என்னே மடமை. மரபிசையோ மறுப்பிசையோ (நான் மட்டும் தமிழிசைக் கலைச்சொல்லகராதிப் புகழ் பெறவேண்டாமா?) எதுவானாலும், நுகர்வுத்தன்மையும் அதனாலான உணர்வெழுச்சியும் அந்தரங்கமாகவே நடைபெறுகிறது. ’மச்சானைப்பாத்தீங்களா’ வுக்கு பேருந்தினின்றும் இறங்கவைக்கும் உணர்வெழுச்சிதான் மரபிசை கேட்டுக் கண்ணீர்மல்கவும் வைக்கிறது. இலக்கணம் தெரிந்ததால் மட்டுமே மரபிசையை விமரிசிக்கவோ அனுபவிக்கவோ முடியாது. இன்னும், எந்த இசைவடிவமும் சில அடிப்படை இலக்கண ஒழுங்குகளுக்குள்ளாகவே அமைகிறது - அதனாலேயே இசை இசையாகிறது. ஆக, இசை நுகர்வும் விமர்சனமும் மரபிசை, திரையிசை பேதமின்றி தன்னனுபவம் சார்ந்த வ்யக்திபரமான (அகவயம் என்றெழுதக் கூசுகிறது) அள்வுகோல்களினாலேயே அமைகிறது என்பது எம் துணிபு. தொடர்புள்ள சுட்டி: http://www.jeyamohan.in/?p=8221
மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை. எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப் இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள் - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும் குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும் அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! - உருவ ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ, பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும் அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...
கருத்துகள்
visit my blog
tamil web library