மலையாளக் கவிஞரும் திரைப்பாடலாசிரியருமான ரஃபீக் அஹமதுவின் கவிதையொன்றைக் கேட்க நேர்ந்தது. அது உடனே பிடித்தும் போய்விட்டது. இன்றைக்கு காசா, உக்ரைன் உள்ளிட்ட பிரதேசங்கள் தொடர்பான பிரச்சனைகள் எல்லாவற்றினோடும் தொடர்புபடுத்திப் பார்க்க வைக்கிறது இக்கவிதை. எனக்குத் முடிந்தவரையில் அணுக்கமாக மொழிபெயர்த்திருக்கிறேன். ஒரு கவியரங்கில் ரஃபீக் இதை வாசிக்கும் யூ ட்யூப் இணைப்பு இங்கே: புவிவரைபடங்கள் - ரஃபீக் அஹமது (மலையாளம்) மைகொண்டு ஒருவரும் இதுவரை ஒரு வரைபடமும் வரைந்ததில்லை - கண்ணீரும் குருதியும் கலந்த ஏதோவொன்றைக் கொண்டல்லாது... எழுதுகோல் கொண்டு யாரும் அவற்றில் எதையும் அடையாளப்படுத்தியதுமில்லை - இதயங்களை நொறுக்கும் ஓர் ஆயுதம் கொண்டல்லாது... வரைபடங்களை எடுத்துப் பாருங்கள்! - உருவ ஒழுங்கில்லாதவை அவையெல்லாம் - இலைகளையோ, பூக்களையோ, பரிதியையோ, நிலவையோ போலத் தோற்றமளிக்கும் எந்த உருவமும் அவற்றிற்கு இருக்காது பாளம் பாளமாக வெடித்திருக்கும் பாதங்கள் போலே, துண்டிக்கப் பட்ட தலைகள் போலே, கதறுகின்ற முகங்கள் ப...
கருத்துகள்
எப்படி இருக்கிறீர்கள் ? என்னாச்சு, தமிழ் வலையுலகம் பக்கம் வரதில்லையா ? பெங்களூர் வாசம் தானே ? என்னை ஞாபகம் இருக்கும் என்று நம்பிக்கை :)
எ.அ.பாலா
விசாரிப்புக்கு நன்றி :)
மற்றபடி பழைய பல்லவி தான்: நேரமின்மை