Tuesday, July 22, 2008

எழுத்து ஊக்கிகள்


எங்களூர் நூலகத்தின் பழைய புத்தகங்களை மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்தார்கள். நானும் கால்கடுக்க மூன்று மணி நேரம் செலவிட்டதில் நான்கைந்து புத்தகங்கள் தேறின. அதிலே தமிழிலே ஸ்ரீரங்கத்து தேவதைகள் கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியில் படிக்கும்போது நண்பன் ஒருவன் பழைய புத்தகக் கடையிலிருந்து இதை வாங்கி வந்திருந்தான். ரொம்ப நாட்கள் அதை வைத்திருந்து இரவல் கொடுத்ததிலோ வீடு மாற்றியதிலோ தொலைந்து விட்டது. இப்போது இது கிடைத்ததும் உற்சாகமாகி விட்டேன். ஸ்ரீரங்கத்துக் கதைகள் என்கிற தொகுப்பு 'தேவதைகள்' உட்பட மேலும் சில கதைகளைக் கொண்டு வெளிவந்திருக்கிறது. ஆனாலும் தொலைத்த, பழைய தொகுப்பு கிட்டியது சந்தோஷமாகத் தான் இருக்கிறது.

சில எழுத்துகள் படித்ததும் அலையலையான நினைவுகளைக் கிளறிவிட வல்லன. ஸ்ரீரங்கத்து தேவதைகள் அவ்வாறான ஒன்று. சுஜாதாவின் மிக அருமையான படைப்பென்றே இதைச் சொல்லுவேன். நம் இளமைக்காலத்தின் நினைவுகளோடு பொருத்திப் பார்க்க முடிவதாலும், சொந்த அனுபவங்களை ஒத்திருப்பதாலும், இன்னும் சில மனதிற்கு நெருக்கமான உணர்வுகளை, காலங்களை நினைவு படுத்துவதாலும் இது எனக்குப் பிடித்திருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் மேலாக சுஜாதாவின் தனித்தன்மை வாய்ந்த துள்ளலும், எள்ளலும், self-deprecating humor உம் தான் இதை ஒரு ஒப்பற்ற வாசிப்பு அனுபவமாக மாற்றுகிறது.

======
இன்னும் சில எழுத்துகளை வாசித்தபின் எண்ணங்கள் குறுகலான முட்டுச் சந்துகளை விட்டு விசாலமான ஒரு பெருவெளிக்கு விடுதலை பெற்றுப் போகின்றன. ஒவ்வொரு முறையும் இப்படி மூச்சு முட்டியிருக்கையிலே புதிய சாத்தியங்களுக்கான வெளிகள் வாசிப்பிலிருந்தே கிட்டிவிடுகின்றன. கொடுமையான கனவு உறக்கம் கலைத்தபின் நிகழ்வாழ்வின் போதம் தரும் ஆசுவாசம் போல இவை பொதுவில் வாழ்வில் புது நம்பிக்கை கொள்ளச் செய்வன.

======

Principles of good writing என்கிற கட்டுரை பள்ளியிலே ஆங்கிலப் பாடத்தில் இருந்தது. அதிலே நல்ல எழுத்துக்கு perspiration 99%, inspiration 1% என்றும், தெளிவான சிந்தனையே தெளிவான எழுத்துக்கு வழி செய்யும் என்றும் சொல்லியிருந்தது. மேலும், ஒரு குறிப்புப் புத்தகமும், பென்சிலும் எப்போதும் கைவசமிருக்கவேண்டும் என்றும், ஏதேனும் நல்ல கருத்தோ, சொற்றொடரோ, எழுத ஏதுவான எதுவோ தோன்றியவுடன் இக்குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அக்கட்டுரையிலே இருந்தது. தற்சமயம் தெளிவான எண்ணங்கள் இல்லை; குறிப்புப் புத்தகமும் இல்லை. இருந்திருந்தால் கடந்த சில தினங்களில் எழுதத் தூண்டிய சில விஷயங்கள் பற்றியும், அலையலையாக அப்போது கிளர்ந்தெழுந்த நினைவுகளையும் குறித்து வைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது அடித்தும் திருத்தியும் எழுதிப்போகும் இக்கணம் நிலவும் கற்பனை வறட்சியும் அதனால் ஏற்படும் சோர்வும் இல்லாமல் இருந்திருக்கலாம்.

சிந்திக்க, எழுதத் தூண்டிய அத்தகைய ஒரு விஷயம்: அருளின் மெய்யியல் / புன்னகையில் மின்சாரம் பற்றிய பதிவு. இப்போதைக்கு எஸ்கேப்.

7 comments:

Vinavu said...

http://vinavu.wordpress.com

Sri said...

This is aka, aadikku oru post, amavasaikku oru post.

CC

Kannan said...

CC,

Point noted. And thanks for registering @ blogspot just to comment on this :) I had taken off the Anonymous option to avoid comment spamming.

Well, your Srirangathu thevathaikal copy was with me till I lost it quite recently when I shifted my house. Was happy to find it and reminisce our days at M.kere...

Anonymous said...

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

Anonymous said...

Hi

Let's come together on http://www.tamiljunction.com to bring all the Tamil souls unite on one platform and find Tamil friends worldwide to share our thoughts and create a common bond.

Let's also show the Mightiness of Tamils by coming together on http://www.tamiljunction.com

J. Ramki said...

வாங்க. வாங்க்... வந்து ஜோதியில் ஐக்கியமாகுங்க..

அன்புடன் ராம்கி
http://wwww.thaiyal.com

Rengasamy said...

Knski

The book Srirangathu Thevathaikal is with me.